கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்
Published on

கூடுதல் பொறுப்பூதியம் வழங்கவேண்டும், இணையதள வசதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சென்னை தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தினுள் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் சுமார் 300 கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், நாகை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தாராபுரம், நெல்லை, மதுரை என தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் 10ம் தேதி ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிடும் போராட்டமும் , 18ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com