Vijay’s Sudden Return Sparks Buzz After TVK Secures Majority
விஜய் - ஆளுநர்Pt web

ஆளுநரின் கேரளா பயணம் ரத்து.. விரைவில் விஜய்க்கு அழைப்பு!

தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம், அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. இதன்மூலம், ஆட்சியமைக்க ஆளுநர் தரப்பில் இருந்து விரைவில் அழைப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பல கருத்துக் கணிப்புகளை தவிடு பொடியாக்கி முதன்முறையாக தேர்தலை சந்தித்த விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. எனினும் ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 என்ற எண்ணிக்கை இல்லாத நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரி வந்தது. காங்கிரஸ் திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தவெகவுடன் கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளிப்பதாகவும், அதேசமயம், திமுகவுடனான கூட்டணியில் தொடர்வதாகவும் தெரிவித்திருக்கின்றனர்

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன் pt web

இந்தசூழலில் தான், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு எண்ணிக்கை 120ஆக உயர்ந்திருக்கிறது. ஏற்கனவே, 3 முறை ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க வலியுறுத்தியிருந்த நிலையில், இன்று 4-வது முறையாக ஆளுநரை சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தனது பட்டினம்பாக்கம் இல்லத்தில் இருந்து ஆளுநர் இல்லத்திற்கு சென்ற நிலையில், பாதியிலேயே மீண்டும் வீட்டிற்கு திரும்பியது பேசுபொருளாகியிருந்தது. மேலும், ஆளுநர் கேரளா செல்லவிருப்பதாக தகவல் பரவிய நிலையில், விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக பார்க்கப்பட்டது. இந்த சூழலில் தான், ஆளுநரின் கேரளா பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம், விஜய்க்கு ஆட்சியமைக்க விரைவில் அழைப்பு வரலாம் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay’s Sudden Return Sparks Buzz After TVK Secures Majority
முதல்வராகிறார் விஜய்.. தவெக ஆட்சியமைக்க விசிக ஆதரவு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com