\
ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்

ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்

ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
Published on: 

அடுத்த பொதுக்கூட்டத்தில் நான் 1 மணி நேரம் பேசுவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்

திருப்பூரில் தேமுதிக முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அடுத்த பொதுக்கூட்டத்தில் நான் 1 மணி நேரம் பேசுவேன் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ''ஒரு நாள் ஒரு பொழுதாவதாவது எனக்கும் விடியும். அப்பொழுது நான் உங்களை தங்க தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்'' என தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ''தமிழகத்தில் சமீப காலமாக படுகொலைகள் அதிகரித்துள்ளன. வெளிநாட்டு முதலீடுகள் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அதிகரித்தால் வழிப்பறி, திருட்டு குறையும். மழை இறைவன் கொடுத்த வரம். அதை நாம் அடுத்த தலைமுறைக்கும் கொடுக்க வேண்டும்'' என தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com