அறவழியில் போராடி வரும் மாணவர்களுக்கு தலை வணங்குகிறேன்... விஜயகாந்த்

அறவழியில் போராடி வரும் மாணவர்களுக்கு தலை வணங்குகிறேன்... விஜயகாந்த்

அறவழியில் போராடி வரும் மாணவர்களுக்கு தலை வணங்குகிறேன்... விஜயகாந்த்
Published on

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி யாருக்கும் இடையூறு தராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

‌இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிவாசல் திறக்கும்வரை வீடு வாசல் திரும்ப மாட்டோம் என கடந்த 6 நாள்களுக்கு மேலாக கடும் குளிரையும், வெயிலையும் பொருட்படுத்தாமல், தன்னெழுச்சியாகப் போராடி வரும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் எனப் பலருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் கண்ணியத்துடனும், அறவழியிலும், யாருக்கும் இடையூறு தராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com