\
விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
Published on

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்து கடந்த 24-ஆம் தேதி வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். அப்போது சில அறிகுறிகளை தொடர்ந்து கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து  10 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி கொரோனாவிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com