\
“சிங்கநடை போட்டு விஜயகாந்த் வருவார்” - கண் கலங்கிய விஜய பிரபாகரன்

“சிங்கநடை போட்டு விஜயகாந்த் வருவார்” - கண் கலங்கிய விஜய பிரபாகரன்

“சிங்கநடை போட்டு விஜயகாந்த் வருவார்” - கண் கலங்கிய விஜய பிரபாகரன்
Published on

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் விஜய பிரபாகரன் கண்ணீர் மல்கப் பேசினார்.

திரைத்துறையிலும்‌, அரசியலிலும் முத்திரை பதித்த விஜயகாந்த் நேற்று 67வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் அவரது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினர்.

விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, வேலூர் மாவட்டம் உமரா‌‌பாத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அவரது மகன் விஜய பிரபாகரன், தன் தந்தையின் உடல்நலம் குறித்து பேசுகையில் கண்கள் கலங்கி, கண்ணீர் விட்டார். விஜயகாந்த் இன்னும் மக்களுக்காக உழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறிய விஜய பிரபாகரன், அவர் விரைவில் குணமடைந்து சிங்கநடை போட்டு வருவார் என்று நா தழுதழுத்த குரலில் கூறினார்.

வீடியோ:

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com