\
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்

“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்

“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
Published on

தேமுதிக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுகவுடன் தேமுதிக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தொகுதி, பெயர் ஆகியவற்றை குறிப்பிடாமல் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

முதல் தடவையாக விருப்ப மனு கொடுத்துள்ள விஜய பிரபாகரன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, ’’தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இங்கு வந்திருக்கிறேன்’’ என்றார். விஜயகாந்த் என்ன சொன்னார் என்று கேட்டதற்கு, ‘’சென்றுவா வெற்றி நமதே!’’ என்று வாழ்த்தியதாக கூறினார். மேலும் தொகுதிபற்றி கேட்டபோது, ’கட்சி நிர்வாகிகள் எந்த தொகுதியை காட்டுகிறார்களோ அதில் நிற்பேன். எங்கு நின்றாலும் தொண்டர்கள் என்னை வெற்றிபெற வைப்பார்கள்’’ என்று கூறினார்.

சென்னை விருகம்பாக்கத்தில் விஜயகாந்தும், தொகுதி குறிப்பிடாமல் பிரேமலதாவும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com