"செப்.15ஆம் தேதி விஜயகாந்த் தலைமையில் முப்பெரும் விழா" - பிரேமலதா விஜயகாந்த்

"செப்.15ஆம் தேதி விஜயகாந்த் தலைமையில் முப்பெரும் விழா" - பிரேமலதா விஜயகாந்த்

"செப்.15ஆம் தேதி விஜயகாந்த் தலைமையில் முப்பெரும் விழா" - பிரேமலதா விஜயகாந்த்
Published on

தேமுதிக தலைவர் விஜ‌யகாந்தின் பிறந்தநாளை, அவர் கட்சியினரும், ரசிகர்களும் உற்சாக‌மாக கொண்டாடி வருகின்றனர்.

திரைத்துறையிலும்‌, அரசியலிலும் முத்திரை பதித்த விஜயகாந்திற்கு இன்று 67வது பிறந்த நாள். 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்த விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ். 1979ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற திரைப்படம்தான் அவரின் சினிமா வாழ்க்கைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், வானத்தை போல என ஏராளமான வெற்றிப்படங்களை தந்து திரையுலகில் வானத்தை தொட்டார் விஜயகாந்த். 

2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கி, அரசியலிலும் காலூன்றியவர் விஜயகாந்த். ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளில், ஏதேனும் ஒரு மக்கள் நல திட்டங்களை தொடங்கி தேமுதிக செயல்படுத்தி வருவதாக அந்த கட்சியின் துணைப் பொதுச் செ‌‌யலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், விஜயகாந்திற்கு பள்ளிக்குழந்தைகள் இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.

இதற்கிடையே விஜயகாந்த் பூரண உடல் ‌நலனுடன் இருப்பதாகவும், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திருப்பூரில் அவர் தலைமையில் முப்பெரும் விழா நடைபெறவுள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com