உடல்நலக் குறைவால் சென்னை ராமாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வீடு திரும்பினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பலவிதமான தகவல்கள் பரவின. இவற்றை மறுத்த அவரது மனைவி பிரேமலதா, வருடாந்திர பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். வீடு திரும்பிய பின்னர் அவர் தனது வழக்கமானப் பணிகளை தொடருவார் என்றும் பிரேமலதா கூறியிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சையின் பலனாக விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் அவர் வீடு திரும்பிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.