\
விஜயகாந்த் மிலாது நபி வாழ்த்து

விஜயகாந்த் மிலாது நபி வாழ்த்து

விஜயகாந்த் மிலாது நபி வாழ்த்து
Published on

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் மிலாது நபி வாழ்த்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதனையொட்டி சிங்கப்பூரில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் “வாழ்க்கையின் அறநெறிகளை மனித சமுதாயத்திற்கு உருவாக்கிக் கொடுத்த, நபிகளின் பிறந்தநாளை கொண்டாடும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கி, அமைதி நிறைந்து, சிறப்பான வாழ்வு வாழ்ந்திட எனது இதயப்பூர்வமான மீலாது நபி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com