மீண்டும் பொது நிகழ்ச்சியில் விஜயகாந்த் - தொண்டர்கள் ஆரவாரம்

மீண்டும் பொது நிகழ்ச்சியில் விஜயகாந்த் - தொண்டர்கள் ஆரவாரம்

மீண்டும் பொது நிகழ்ச்சியில் விஜயகாந்த் - தொண்டர்கள் ஆரவாரம்
Published on

திருப்பூருக்கு வருகை தந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு, அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தேமுதிகவின் 15வது ஆண்டு தொடக்க விழா, விஜயகாந்த் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நாளை திருப்பூரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றார். 

நெடுநாட்களுக்குப் பிறகு, பொது நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விஜயகாந்துக்கு, பெருமாநல்லூரில் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேனிலிருந்தபடியே விஜயகாந்த் தொண்டர்களுக்கு வணக்கம் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com