\
“அத்திவரதரை தரிசிக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும்”- விஜயகாந்த்

“அத்திவரதரை தரிசிக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும்”- விஜயகாந்த்

“அத்திவரதரை தரிசிக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும்”- விஜயகாந்த்
Published on

காஞ்சிபுரம் அத்திவரதரை பொதுமக்கள் தரிசிக்க கூடுதல் நே‌ரம் ஒதுக்‌க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.‌

இதுதொ‌டர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 48 நாட்கள் மட்டுமே காட்சி தரும் அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதை ‌குறிப்பிட்டுள்ளார். அத்திவரதரை தரிசிக்க வரும் ‌பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பும், அத்தியாவசிய உதவி‌களும் வ‌ழங்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்‌.

குறிப்பாக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் அத்திவரதரை பொதுமக்கள் தரிசிக்க கூடுதல் நே‌ரம் ஒதுக்‌க வேண்டும் என‌வும்  தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை ‌‌விடுத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com