\
விஜயதசமி பண்டிகை: கோயில்கள் திறக்கப்படுமா? முதல்வர் இன்று ஆலோசனை

விஜயதசமி பண்டிகை: கோயில்கள் திறக்கப்படுமா? முதல்வர் இன்று ஆலோசனை

விஜயதசமி பண்டிகை: கோயில்கள் திறக்கப்படுமா? முதல்வர் இன்று ஆலோசனை
Published on

கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் அக்டோபர் 31 ஆம் தேதி வரை உள்ளன. இந்த நிலையில், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத் தலங்களை திறக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விஜயதசமி அன்று கோயில்களை திறக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதனிடையே, விஜயதசமி அன்று கோயில்களை திறப்பது குறித்து அரசே முடிவெடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் முதல்வர் நடத்தும் ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com