தண்ணீரில் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தண்ணீரில் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தண்ணீரில் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
Published on

வெள்ள பாதிப்புகளின் போது தண்ணீரில் செல்லக்கூடிய வசதி கொண்ட ஆம்புலன்ஸ்கள், சென்னை ஐஐடி சார்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பல்வேறு சிறப்பம்சங்களுடன் அந்த ஆ‌‌ம்புலன்ஸ் வடிவமைக்கப்படுவதாகவும் கூறினார்.
சென்னை ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆராய்ச்சி மையத்தில் தமிழ்நாடு விபத்து மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு குறித்த பட்டறை நடைபெற்றது. இதில் சுகாதார துறை அமைச்சர் விஜயாபாஸ்கர், சுகாதார துறைசெயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் TAEI என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், "இந்த TAEI  செயலியின் மூலம் அரசு மருத்துவமனையின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். அடுத்த கட்டமாக விபத்துகளுக்கு உதவும் வகையில் மற்றும் ஒரு செயலியை ஒரு வாரத்திற்குள் அறிமுகப்படுத்த உள்ளோம். தற்போது வெள்ள பாதிப்புகள் அதிகரித்து வருவதால் தண்ணீரில் செல்ல கூடிய அளவிலான ஆம்புலன்ஸ் வசதியைக் கொண்டு வர இருக்கிறோம்.”என்றார்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com