"கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் சுகாதாரத் துறையை அணுகலாம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

"கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் சுகாதாரத் துறையை அணுகலாம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

"கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் சுகாதாரத் துறையை அணுகலாம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவோர் சுகாதாரத்துறையை அணுகி பரிசோதனை மூலமாக நிரூபித்தால் அங்கீகாரம் அளிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய சிகிச்சை வழங்கப்படுகிறது, அவர்கள் கையாளும் முறை என்ன என்பது குறித்து சர்வதேச மருத்துவர்களுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மருத்துவமனைகளில் உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பள்ளி கல்லூரிகளில் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவோர் சுகாதாரத்துறையை அணுகி பரிசோதனை மூலமாக நிரூபித்தால் அங்கீகாரம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை 129 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com