\
ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக்காரர்களை சந்தித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக்காரர்களை சந்தித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக்காரர்களை சந்தித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களைச் சந்தித்துப் பேசினார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் மக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹைட்ரோகார்பன் திட்டத்தில் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் என்றார். மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது என விஜயபாஸ்கர் கூறினார். பிரதமரை சந்திக்கும் போது ஹைட்ரோகார்பன் குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி முறையிடுவார் எனக் கூறிய அவர், தமிழக அரசு மௌனம் காக்கவில்லை என்றும் மக்களின் உணர்வுகளை அரசு புரிந்து கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com