தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகினர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை மறுநாள் (12-ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக
புகார்கள் எழுந்தன. இதையடுத்து வருமான வரித்துறை, தமிழ்க சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ
பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தியது. இதில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து,
இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை உத்தரவிட்டது. அதன்படி, இன்று காலை அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறை
அலுவலகத்தில் ஆஜரானார். அவரைத் தொடர்ந்து நடிகர் சரத்குமாரும் ஆஜரானார்.
அவரிடம் கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்து இவர்களிடம் இன்று விளக்கம் கேட்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக வருமான வரித்துறை
அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.