தவெக தலைவர் விஜய் செங்கோட்டையனை வரவேற்று வீடியோ வெளியீடு
தவெக தலைவர் விஜய் செங்கோட்டையனை வரவேற்று வீடியோ வெளியீடுpt web

தவெகவில் இணைந்த செங்கோட்டையன்., வரவேற்று வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

செங்கோட்டையன் அவர்களின் அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என்ற நம்புகிறேன் என தவெகவில் இணைந்திருக்கும் செங்கோட்டையனை வரவேற்று தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Published on

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறுகையில், "20 வயது இளைஞராக இருக்கும்போதே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை நம்பி அவரது மன்றத்தில் சேர்ந்தவர். மேலும், அந்த சிறுவயதிலேயே எம்.எல்.ஏ என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். பிறகு, அவரின் அரசியல் பயணத்தில் அந்த இயக்கத்தின் இருபெரும் தலைவர்களின் ஒரு பெரும் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். இப்படி 50 வருடமாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவர்களின் அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், அவருக்கும், அவருடன் இணைந்து பயணிக்க நம்முடன் கை கோர்க்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய், செங்கோட்டையன்
தவெக தலைவர் விஜய், செங்கோட்டையன்pt web

முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்திக்கிறார். மேலும், செங்கோட்டையனுடன் சேர்த்து அவரின் ஆதரவாளர்கள் பலரும் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று, இணைதிருக்கின்றனர். இந்நிலையில், அவருக்கு தவெக நிர்வாக குழுவை வழி நடத்தும் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கவிருப்பதாக பேசப்பட்டுவருகிறது. தவெகவில் அனுபவமிக்க தலைவர்கள் இல்லை என்று விமர்சனங்கள் இல்லை என விமர்சங்கள் எழுந்து வந்த நிலையில், 50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com