\
Vijay Visits Passport Office for Diplomatic Passport
cm vijayPt web

முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம்.? Diplomatic Passport எடுக்க முதல்வர் வருகை!!

அரசு முறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், 'டிப்ளமேடிக் பாஸ்போர்ட்’ சார்ந்த பணிகளை மேற்கொள்ள அண்ணாசாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்தார்.
Published on

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, முதன்முறையாக அரசு முறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூற்படுகிறது. குறிப்பாக, செப்டம்பர் 10-ம் தேதி லண்டன் செல்லும் முதல்வர் விஜய், செப்டம்பர் 16-ம் தேதி தமிழக திரும்பவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்தச்சூழலில் தான், தனது 'டிப்ளமோடிக் பாஸ்போர்ட்' (Diplomatic Passport) சார்ந்த சில பணிகளை மேற்கொள்வதற்காக, சென்னை அண்ணாசாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அவர் நேரில் வருகை தந்தார்.

CM Vijay
முதல்வர் விஜய்Pt web

சர்வதேச அளவில் ஒரு நாடு அல்லது மாநிலத்தின் சார்பில் அதிகாரப்பூர்வ அரசுப் பணிகளை மேற்கொள்ளும் உயர்மட்டப் பிரதிநிதிகள் மற்றும் தூதர்களுக்கு 'டிப்ளமோடிக் பாஸ்போர்ட்' வழங்கப்படுகிறது. மெரூன் வண்ண அட்டையில் வழங்கப்படும் இந்தச் சிறப்பு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு, சர்வதேச சட்டங்களின்படி பல நாடுகளுக்கு விசா இன்றிப் பயணிக்கும் வசதியும், விமான நிலையங்களில் முன்னுரிமைச் சோதனைகளும் வழங்கப்படுகின்றன.

Vijay Visits Passport Office for Diplomatic Passport
பிரதமராக வேண்டும் என்று நினைத்தால்.. Be careful- காங். விடுத்த எச்சரிக்கை: காங்-தவெக வார்த்தை போர்!

குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் போன்ற உயர்மட்டப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் சிறப்பு ஒப்புதலுடன் இது வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட அரசுப் பயணக் காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் இந்த பாஸ்போர்ட்டை, பயணம் அல்லது பதவிக் காலம் முடிந்ததும் அரசிடம் மீண்டும் ஒப்படைப்பது கட்டாயமாகும்.

பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணிகளை முடித்து சென்ற பிறகு மீண்டும் காத்திருந்த பொதுமக்களுக்காக காரில் இருந்து இறங்கி கையசைத்தவாறு வணக்கம் வைத்து பின் காரில் ஏறி முதல்வர் விஜய் புறப்பட்டு சென்றார். 

Vijay Visits Passport Office for Diplomatic Passport
புதுக்கோட்டை| அரசுப் பேருந்தில் அதிர்ச்சி சம்பவம்! பழங்குடியின மாணவிகளை தள்ளிவிட்ட நடத்துநர்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com