கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல்: விஜய் வசந்த் முன்னிலை

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல்: விஜய் வசந்த் முன்னிலை

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல்: விஜய் வசந்த் முன்னிலை
Published on

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய் வசந்த் முன்னிலை வகிக்கிறார்.

கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.  காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த போட்டியிட்டார். பாஜக சார்பில் கடந்த முறை வசந்தகுமாரிடம் தோல்வியடைந்த பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் களம் இறங்கினார்.  கடந்த மாதம் 6 தேதி நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 68.80 சதவீத வாக்குகள் பதிவாகின.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில் முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் 24,218 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன்  13,482 வாக்குகளைப் பெற்று பின்னடைவைச் சந்தித்து வருகிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com