நாமக்கல், கரூரில் விஜய் இன்று பரப்புரை.. குவிந்துவரும் தவெக தொண்டர்கள்!
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை தவெக தலைவர் விஜய், கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூரில் தொடங்கினார். இரண்டாம் கட்டமாக நாகை, திருவாரூரில் கடந்த 20ஆம் தேதி விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
இந்நிலையில், 3ஆவது கட்டமாக நாமக்கல், கரூர் மாவட்டங்களில் விஜய் இன்று பரப்புரையில் ஈடுபடுகிறார்.
நாமக்கல், கரூரில் பரப்புரை..
3-ம் கட்ட தேர்தல் பர்ப்புரைக்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் செல்லும் விஜய், அதன்பிறகு சாலை மார்க்கமாக நாமக்கல் செல்கிறார். அங்குள்ள சேலம் சாலை பகுதியில் காலை 11 மணியளவில் விஜய் பரப்புரை மேற்கொள்கிறார்.
அதனை தொடர்ந்து கரூர் செல்லும் விஜய், வேலுசாமிபுரம் பகுதியில் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். விஜயின் பரப்புரைக்காக ஏற்பாடுகளை தவெகவினர் தீவிரமாக செய்து வரும் நிலையில், காவல் துறையினர் தரப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பரப்புரையின் திட்டம் என்ன?
நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் அருகே காலை 8.45 மணிக்கு விஜய் பரப்புரை செய்யவிருக்கிறார். அதனைத்தொடர்ந்து கரூர் வேலுச்சாமிபுரத்தில் நாளை பகல் 12 மணிக்கு தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்கிறார்.
நாளை நாமக்கல், கரூர் பரப்புரையை முடித்துக்கொண்டு இரவு 10 மணிக்கு சென்னை திரும்புகிறார் விஜய். இந்த முறை திட்டமிட்ட நேரத்தில் பரப்புரை செய்ய தவெக தலைவர் விஜய் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தவெக தலைவர் விஜய் நாமக்கல் செல்வதற்கான பயணத்தை இன்னும் தொடங்கவில்லை.
அதேநேரம் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்யவுள்ள நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் பகுதியில் தவெக தொண்டர்கள் குவிந்துவருகின்றனர்.