‘துயரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை’: அனிதா மரணத்தால் விஜய்சேதுபதி சோகம்!

‘துயரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை’: அனிதா மரணத்தால் விஜய்சேதுபதி சோகம்!

‘துயரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை’: அனிதா மரணத்தால் விஜய்சேதுபதி சோகம்!
Published on

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது குறித்து அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் ட்விட்டரில் தங்களுடைய வருத்தத்தைப் பகிர்ந்து வருகிறார்கள்.

ஜோதிமணி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்
அரியலூர் அனிதாவின் மரணம் அதிர்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.அவசரப்பட்டுவிட்டாயே கண்ணே! இது ஒரு நீட் கொலை.

ஜி.வி.பிரகாஷ்குமார், நடிகர் & இசையமைப்பாளர்
கழிப்பறை கூட இல்லாத வீட்டில் மருத்துவ கனவோடு பிறந்த அனிதா - இன்று இல்லை. நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் மரணம் அதிகாரமும் சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை.

விஜய்சேதுபதி, நடிகர்
துயரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. என் சகோதரி அனிதாவின் பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

நடிகர் மனோபாலா
இது தற்கொலை அல்ல..கொலை..

நடிகர் அசோக் செல்வன்
தாங்க முடியாத வலி, கோபம் மற்றும் அதிர்ச்சியில் இருக்கிறேன். வார்த்தைகள் இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com