நடிகர் விவேக் நினைவாக 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் முயற்சியில் இறங்கிய விஜய் ரசிகர்கள்!

நடிகர் விவேக் நினைவாக 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் முயற்சியில் இறங்கிய விஜய் ரசிகர்கள்!

நடிகர் விவேக் நினைவாக 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் முயற்சியில் இறங்கிய விஜய் ரசிகர்கள்!
Published on

நடிகர் விவேக்கின் 1 கோடி மரங்கள் நடும் கனவை நினைவாக்கும் வகையில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் விஜய் மக்கள் இயக்க இளைஞரணியினர். 

நகைக்சுவை நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். நடிகர் விவேக் நடிப்பின் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். திரை உலகைத் தாண்டி பொது வாழ்க்கையிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். குறிப்பாக கிரீன் கலாம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழகமெங்கும் மரம் வளர்ப்பை முன்னெடுத்து வந்தார். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமோடு நல்ல நட்பு பாராட்டியவர். அந்த உறவின் அடையாளமாக கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழகம் முழுவதும் 1 கோடி மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற தொடர்ந்து இயங்கி வந்தார். 

இந்நிலையில் நடிகர் விவேக்கின் 1 கோடி மரங்கள் நடும் கனவை நினைவாக்க, மறைமலைநகர் நகராட்சியில் 1 லட்சம் மரம் நடுவதற்கு காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணியினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com