\
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம்Facebook

கட்சிக் கொடி அறிமுக விழாவிற்கு புறப்பட்டார் நடிகர் விஜய்: பெற்றோர் பங்கேற்பு

தனது இல்லத்திலிருந்து புறப்பட்டுள்ள நடிகர் விஜய், இன்று பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் வைத்து கட்சிக்கொடியை அறிமுகம் செய்யவுள்ளார்.
Published on

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இருவண்ணங்களில், 2 போர் யானைகளுடன் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கொடி வடிவமைக்கப்பட்டிருப்பதாக புதிய தலைமுறைக்கு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், காலை 8.50 மணி அளவில் தனது வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார் நடிகர் விஜய். இதனையடுத்து, 10.30 மணியிலிருந்து - 11 மணிக்குள் கட்சி கொடியையும் மற்றும் அதற்கான பாடலையும் பனையூரிலுள்ள தனது கட்சி தலைமை அலுவலகத்தில் அறிமுகம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொடியை அறிமுகம் செய்தவுடன், தமிழக வெற்றிக்கழகத்தின் உறுதிமொழியானது எடுக்கப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து, கொடிப்பாடலும் வெளியாகவுள்ளது.

இதன்பின்னர், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரையும், மாநில இணைச்செயலாளர்கள் மற்றும் கட்சியின் தலைவரான விஜய் என மொத்தம் 5 பேர் இந்நிகழ்ச்சியில் உறையாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்
‘வெற்றிக் கொடி கட்டு’ பாணியில் கம்பெனி நடத்தி மோசடி.. நொய்டா கும்பலின் பகீர் பின்னணி

கட்சிக்கொடியின் வண்ணங்களின் விவரங்கள், சின்னத்தின் விவரங்கள், கொள்கை குறித்தான விவரங்கள் என மொத்தம் 5 நிமிடங்கள் விஜய் உரை நிகழ்த்த உள்ளார் என்றும், தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு குறித்தான அறிவிப்பும் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவில் அக்கட்சியின் தலைவரான விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com