திருச்செந்தூர் கோயிலில் சத்ரு சம்ஹார பூஜை! விஜயின் வேண்டுதல் அரசியல் வெற்றியாக மாறுமா?
தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இன்று மீண்டும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதிகாலை நேரத்தில் கோயிலுக்கு வருகை தந்து சத்ரு சம்ஹார பூஜை நடத்தியது கவனம் பெற்றுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்கும் இந்த திருத்தலம், கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள தனித்துவமான தெய்வீக இடமாக கருதப்படுகிறது. பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அதிகமாக வருகை தரும் முக்கிய தலமாக இது உள்ளது.
இத்திருக்கோவிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மேற்கொள்வது வழக்கம். குறிப்பாக திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை காலங்களில் இந்த எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காக உயர்கிறது. இந்த சூழலில், இன்று அதிகாலை விஜய் கோவிலுக்கு வருகை தந்தார். இந்த தகவல் அறிந்த பக்தர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அவரைக்கான குவிந்தனர். கோவிலுக்குள் நுழைந்த அவர், மிகவும் சிறப்பு பெற்ற சத்ரு சம்ஹார மூர்த்தியை தரிசனம் செய்தார். பின்னர், அதனைத் தொடர்ந்து சத்ரு சம்ஹார பூஜையில் கலந்து கொண்டு வேண்டுதல் செய்தார்.
சத்ரு சம்ஹார பூஜை என்பது எதிரிகளை வெல்லவும், தீய சக்திகளை அகற்றவும் செய்யப்படும் ஒரு சக்திவாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது. குறிப்பாக அரசியல் மற்றும் தொழில் துறைகளில் உள்ளவர்கள் இந்த பூஜையை அதிகமாக செய்து வருகின்றனர். இந்த யாகத்தை நடத்தினால் எதிரிகள் வீழ்வர் என்ற நம்பிக்கை பலரிடமும் நிலவுகிறது. அதனால் அரசியல்வாதிகள் பலர் இந்த கோயிலுக்கு வந்து இத்தகைய பூஜைகளை நடத்துவது வழக்கமாகியுள்ளது.
அந்த வரிசையில், தற்போது விஜய் முதன்முறையாக இந்த சத்ரு சம்ஹார பூஜையை நடத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியமான விவாதமாக மாறியுள்ளது. பூஜை முடிந்த பின், அவர் மூலவர் சன்னதிக்கு முன்பு தரையில் அமர்ந்து மனமுருக பிரார்த்தனையில் ஈடுபட்டார். இது அவரது ஆன்மிக ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. அதனைத் தொடர்ந்து, சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளிலும் அவர் தரிசனம் செய்தார். மேலும் தட்சிணாமூர்த்தி, பெருமாள், சூரசம்கார மூர்த்தி ஆகிய தெய்வங்களையும் வழிபட்டார். சத்ரு சம்ஹார பூஜையின் சிறப்பு, எதிரிகள், வழக்குத் தொல்லைகள், நோய்கள் போன்றவற்றிலிருந்து விடுபடச் செய்வதாக நம்பப்படுகிறது. இது மன உறுதியையும் தைரியத்தையும் அதிகரிக்க உதவும் என பக்தர்கள் கருதுகின்றனர்.
மேலும், கடன் சிக்கல்கள், தொழில் நஷ்டம் மற்றும் செவ்வாய் தோஷம் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனால் இந்த பூஜைக்கு தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. அரசியல் உலகில், இத்தகைய யாகங்கள் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை சிலரிடையே பரவலாக உள்ளது. குறிப்பாக தேர்தல் காலங்களில் இவ்வகை ஆன்மிக முயற்சிகள் அதிகரிப்பது வழக்கம். இந்த நிலையில், விஜய் மேற்கொண்டுள்ள இந்த பூஜை அவரது அரசியல் பயணத்திற்கு சாதகமாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவரது இந்த ஆன்மிக முயற்சி தேர்தல் முடிவுகளில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். எனினும், இந்த பூஜையின் விளைவாக அரசியல் வெற்றி கிடைக்குமா என்பது காலத்தின் போக்கில் தான் தெளிவாகும். அதுவரை, விஜய் எடுத்துள்ள இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் ஆன்மிக வட்டாரங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருக்கும் என்பது உறுதி.
