விஜய் மக்கள் இயக்க இலவச சட்ட ஆலோசனை மையம் - இதன் பணிகள் என்னென்ன?

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக இலவச சட்ட ஆலோசனை மையம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் பணிகள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
vijay
vijaypt desk

தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் விஜய், தனது ரசிகர்களின் துணையோடு அரசியலில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார். தனது பெயரில் இயங்கும் விஜய் மக்கள் இயக்கத்தை, அரசியல் இயக்கமாகவே நடத்தி வரும் விஜய், மக்கள் இயக்கம் சார்பில் இதுவரை விலையில்லா மருந்தகம், குழந்தைகளுக்கான சத்துணவு பொருட்களான பால், முட்டை, ரொட்டி வழங்குதல், ஏழை குழந்தைகளுக்கான இரவு நேர பயிலகம் போன்ற திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

Vijay
Vijay

இந்நிலையில், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏழை - எளிய மக்களின் நலனுக்காக இலவச சட்ட மையம் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக இலவச சட்ட மையம் இன்று சென்னையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த மையத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது...

ஏழை - எளிய மக்கள் சட்ட உதவிகள் தொடர்பாக அவதிபடக் கூடாது என்ற அடிப்படையில், சென்னை கொடுங்கையூர் கே.கே.நகர் 6-வது தெருவில் இலவச சட்ட ஆலோசனை மையம் இன்று (09.10.2023) திறந்து வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் இந்த மையத்தில் சட்ட ஆலோசனைகளை பெறலாம். இதுபோல சென்னையின் இதர பகுதிகளுக்கும், பிற மாவட்டங்களுக்கும் இலவச சட்ட ஆலோசனை மையம் விரிவுபடுத்தப்பட உள்ளது என்று கூறினார்.

actor vijay
actor vijaypt desk

விஜய் மக்கள் இயக்கத்தின், இலவச சட்ட ஆலோசனை மையப் பணிகள் என்ன?

# குடும்பத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான சட்ட ஆலோசனை வழங்குதல் (DVOP)

# விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய நிவாரணம் கிடைக்க அவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குதல். (MCOP)

# கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்படும் நபருக்கு முறையான சட்ட ஆலோசனை வழங்குதல்.

# சிறுவர், சிறுமியர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு (Pocso) எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய சட்ட ஆலோசனை வழங்குதல்.

# வங்கிக்கடன், வீட்டுக்கடன், தனியார் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குதல். இதேபோல், காப்பீடு விவகாரங்கள் மற்றும் நுகர்வோர் நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கான சட்ட ஆலோசனைகளை வழங்குதல்.

# வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான சட்ட ஆலோசனை வழங்குதல்.

vijay
vijaypt desk

# நிறுவனங்களின் நடவடிக்கையால் திடீர் பணி நீக்கம், ஓய்வூதியத் தொகை கிடைப்பதில் சிக்கல் உள்ளிட்ட தொழிலாளர் நலத்துறை தொடர்பான விவகாரங்களில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவது.

# பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேரும்போது, அவர்களின் சான்றிதழ்களை (முறையாக சரிபார்த்த பிறகு) Attestation கையெழுத்து வழங்க உதவி செய்வது.

# சட்டப் படிப்பு படிக்க விரும்பும் மாணவ, மாணவியருக்கு வழிகாட்டுதல்.

# அந்தந்த பகுதிகளில் உள்ள பொது பிரச்னைகளுக்கு சட்டரீதியாக தீர்வு காண வழிவகை செய்வது. (உதாரணமாக சாலை வசதி, பொது மயானம், குடிநீர் வசதி கிடைக்க போராடும் மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவது)

சட்ட ஆலோசனை மையத்தின் நிர்வாக அமைப்பு :

* ஒரு மையத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவரும், இளைய வழக்கறிஞர் இருவரும் (ஒருவர் பெண்) இருக்க வேண்டும்.

* முதலில் மாவட்ட அளவிலும், பின்னர் தொகுதிகள் வாரியாகவும் இலவச சட்ட மையங்களை இயங்க செய்ய வேண்டும்.

vijay
vijaypt desk

* முதல் கட்டமாக வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே மையங்களை இயக்கலாம். இதற்கான வேலை நேரத்தை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நிர்ணயிக்கலாம். தொடர்பு எண்களை அறிவித்து, பிரச்னைகளுக்கு ஏற்ப ஆலோசனைகள் வழங்கலாம்.

* இலவச சட்ட மையத்துக்கு என்று தனியாக அலுவலகம் அமைப்பது அவசியம் என்றாலும், தற்காலிகமாக சட்ட மையத்தின் நிர்வாகியாக இருக்கும் மூத்த வழக்கறிஞரின் அலுவலகத்தை பயன்படுத்தலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com