“நியூட்ரினோவிடம் இருந்து தேனியை காப்பாற்றுங்கள்” - விஜய் ரசிகர்களின் அடுத்த ட்ரெண்டிங்

“நியூட்ரினோவிடம் இருந்து தேனியை காப்பாற்றுங்கள்” - விஜய் ரசிகர்களின் அடுத்த ட்ரெண்டிங்
“நியூட்ரினோவிடம் இருந்து தேனியை காப்பாற்றுங்கள்” - விஜய் ரசிகர்களின் அடுத்த ட்ரெண்டிங்

நியூட்ரினோவிடம் இருந்து தேனியை காப்பாற்றுமாறு விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

‘பிகில்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்த நடிகர் விஜய், சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்வதை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துமாறு ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் சுபஸ்ரீ மரணத்தில் தவறு செய்தவர்கள் குறித்து அவர் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். விஜய் பேச்சின் எதிரொலியாக அவரது ரசிகர்கள் அவ்வப்போது ட்விட்டரில் சமூக பிரச்னைகள் தொடர்பாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் பேசிய அடுத்த நாளே #JusticeforSubasri என சுபஸ்ரீ மரணத்திற்கு நீதி கேட்டு ட்ரெண்ட் செய்தனர். அதைத்தொடர்ந்து #KEEZHADIதமிழ்CIVILIZATION என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி கீழடி பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் ட்ரெண்ட் செய்தனர். இந்த ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் தற்போது நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக ட்ரெண்ட் செய்துள்ளனர். இதற்காக #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, நியூட்ரினோ திட்டத்திடம் இருந்து தேனியை காப்பாற்றுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர். விஜய் ரசிகர்களுடன் மற்ற நெட்டிசன்கள் இந்த ஹேஷ்டேக்கிற்கு ஆதரவளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com