”விஜய் என்ன உங்களுக்கு போதைப்பொருளா?” - காவல்துறையின் பதிவால் கொந்தளித்த ரசிகர்கள்!

”விஜய் என்ன உங்களுக்கு போதைப்பொருளா?” - காவல்துறையின் பதிவால் கொந்தளித்த ரசிகர்கள்!
”விஜய் என்ன உங்களுக்கு போதைப்பொருளா?” - காவல்துறையின் பதிவால் கொந்தளித்த ரசிகர்கள்!

குற்ற நடவடிக்கைகளை தடுக்க சட்ட ரீதியாக பல்வேறு முன்னெடுப்புகள் தமிழக காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மக்களை எளிதில் கவரக் கூடிய மீம்ஸ் மூலமாகவும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை கையில் எடுத்து வருகிறார்கள்.

அதன்படி பல்வேறு மாவட்ட காவல்துறையினரும் மீம்ஸ் வாயிலாக மக்களுக்கு முக்கிய அறிவுரைகள், உத்தரவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டு சேர்க்கிறார்கள்.

இப்படி இருக்கையில், தமிழக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சார்பில் வெளியிடப்பட்டிருந்த விழிப்புணர்வு பதிவு ஒன்று பெரும் சர்ச்சையானதால் தற்போது நீக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதன்படி, நடிகர் விஜய் வாக்குச் சாவடியில் வாக்களித்த போது முதியவர் ஒருவர் விஜய்யை கண்டுக்கொள்ளாமல், தேர்தல் அதிகாரிக்கு கை கொடுத்துவிட்டு செல்லும் பழைய வைரல் வீடியோவை மீம் template ஆக வைத்துதான் தமிழக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்துறை விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டிருந்தது.

அதில் நடிகர் விஜய்யை போதைப் பொருளாகவும், வாக்குச்சாவடியில் இருந்த தேர்தல் அதிகாரி நல்ல வாழ்க்கையாகவும், வாக்காளர் போதைப்பொருளை பயன்படுத்துபவராகவும் சித்தரித்து, போதைப்பொருளை கண்டுக்கொள்ளாமல் சென்றால் நல்ல வாழ்க்கை கிடைக்கும் என சித்தரித்து வீடியோ மீம் பகிரப்பட்டிருந்தது.

இதனைக் கண்ட விஜய் ரசிகர்கள், விஜய்யை எப்படி போதைப் பொருளாக சித்தரிப்பீர்கள் என கண்டித்தும், கொந்தளித்தும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறை அந்த விழிப்புணர்வு பதிவை நீக்கியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com