தமிழ்நாடு
போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
அறந்தாங்கி,திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அறந்தாங்கி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடந்தபோது அதிகாரிகளைக் கண்டதும், சில ஊழியர்கள் ரூபாய் நோட்டுகளை வெளியே வீசியெறிந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் ஐந்து நகரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென நுழைந்து, அங்கிருந்த ஊழியர்களிடம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடத்தினர். அதில் 2 லட்சத்து 10 ஆயிரம் பணம் பிடிபட்டது. அங்கிருந்த இடைத்தரகர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.