கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை : 1.80 லட்சம் பறிமுதல்

கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை : 1.80 லட்சம் பறிமுதல்

கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை : 1.80 லட்சம் பறிமுதல்
Published on

கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 1.80 லட்சம் பணம் உள்பட 500 க்கும் மேற்பட்ட ஆர்.சி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை துடியலூர் பகுதியிலுள்ள வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீரென நேற்றிரவு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையில் சுமார் நான்கு மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. 

இந்த சோதனை முடிவில் கணக்கில் வராத 1.80 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதோடு இருநூறுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர், அலுவலகம் மூடிய பிறகு புரோக்கர்களுக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் என்ன வேலை? என்று லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்டனர். 

மேலும் இடைத்தரகர்கள் 22 பேர், அலுவலக ஊழியர்கள் 8 பேர், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com