\
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை - முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை - முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை - முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
Published on
வழக்கு தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 16 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4.85 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அவர் மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகிய மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இந்த நிலையில் வழக்குத் தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தங்கமணிக்கு தொடர்புடைய 16 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். இந்த சோதனையில் பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினிகள், ஹார்டு டிஸ்குகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 15 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.2.16 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com