'ரூ.70 கோடிக்கு முதலீடு செய்த இளங்கோவன்' - லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!

'ரூ.70 கோடிக்கு முதலீடு செய்த இளங்கோவன்' - லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!
'ரூ.70 கோடிக்கு முதலீடு செய்த இளங்கோவன்' - லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் தொடர்புடைய 36 இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில், ஐந்தரை லட்சம் மதிப்பிலான அந்நிய செலாவணியும் 45 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடுகளும் கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இளங்கோவனுக்கு தொடர்புடைய சென்னை, கோவை, நாமக்கல், திருச்சி, சேலம் என 36 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பிலான அந்நிய செலாவணி, 25 கோடி ரூபாய் மதிப்பிலான உள்நாட்டு பங்கு வர்த்தக முதலீடுகள் மற்றும் 45 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடுகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஒரு நகை கடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 20 கிலோ தங்க நகைகள் மற்றும் 280 கிலோ வெள்ளி நகைகள், இருப்பை விட கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டது என்றும் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com