'வேற யாரு? நம்ம மீம்ஸ் கிரியேட்டர்ஸ் தான்' - வாசகர்களின் ‘வாவ்’ கமெண்ட்ஸ்

'வேற யாரு? நம்ம மீம்ஸ் கிரியேட்டர்ஸ் தான்' - வாசகர்களின் ‘வாவ்’ கமெண்ட்ஸ்
'வேற யாரு? நம்ம மீம்ஸ் கிரியேட்டர்ஸ் தான்' - வாசகர்களின் ‘வாவ்’ கமெண்ட்ஸ்

தினமும் மாலை 7 மணிக்கு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் ஒரு தலைப்பு வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஜனவரி 31ம் தேதிக்கான தலைப்பாக ‘பாஜக தனித்துப் போட்டி... பலனடையப் போவது யார்?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்ஸ்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.

https://www.facebook.com/kadai.nainar
அ.தி.மு.க டெபாஸிட் வாங்கனும்; பாஜக கூட்டணியிருந்தால் மக்கள் முழுதாக அ.தி.மு.கவை அடக்கமாக்கிவிடுவார்களென்று தனி தனியாக நிற்பது மறைமுக உதவிகள் என்று இருகட்சிகளும் ஒப்பந்தம்.

https://www.facebook.com/profile.php?id=100009873826660
நீங்கள் யார் என்ன கருத்து சொன்னாலும் பாஜக வளர்வது உண்மை....இன்று திமுக அதிமுக கொடி பறந்த கிராமங்களில் பாஜக கொடியை சர்வசாதாரணமாக பார்க்க முடிகிறது..... அதிகமாக திமுக கட்சியை சேர்ந்த கிராமத்தில் இருதரப்பு கோவில் பிரச்சனையில் அங்கே பாஜகதான் அவர்களுக்கு துணை நின்றது....திமுகவை சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லை...நிச்சயமாக பாஜக அதிக இடங்களை கைப்பற்றும்.... பொறுந்திருந்து பாருங்கள்..... அப்போது மெஷினை குறை சொல்ல முடியாது.... கண்டிப்பாக நடந்தே தீரும்.

https://www.facebook.com/profile.php?id=100023832458278
வேற யாரு நம்ம மீம்ஸ் கிரியேட்டர்ஸ் தான்

https://twitter.com/saran_the_boss
பலனைடைய போவது மக்கள். ஏன் என்றால் அவர்கள் நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள்.

https://www.facebook.com/kathiravan.mani.165
12,400 இடங்களில் தனித்துப் போட்டியிட போகும் பாஜக வேட்பாளர்களின் வைப்பு தொகை அரசுக்கு லாபம்.
தனித்து போட்டியால் பயனடைய போவது அரசு தான்

https://twitter.com/thamilichanel
நாம் தமிழர் கட்சி ! திமுக வாக்குகள் குறைய வாய்ப்புள்ளது,
சிறுபான்மையினர் வாக்குகளும் பெண்களின் வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறை அதிகம் விழ வாய்ப்புண்டு. அதிமுக விற்கும் ஒரு வகையில் சாதகமே. தேர்தல் நேர்மையாக நடந்தால் நாம் தமிழர் கட்சி மேலிடம் தான்

https://twitter.com/SweeterArun
கோவையில் மநீம சென்னையில் திமுக மற்ற இடங்களில் அதிமுக தொண்டர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும் பாஜக பிரிவால்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com