எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை!- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை!- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை!- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike
Published on

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, நேற்று பிப்ரவரி 24-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக "ரஷ்ய- உக்ரைன் யுத்தம்: போரைத் தாங்குமா உலகம்?" எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே...

அரசு, ஐ.டி, கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்ப்போர் முதலாளிகள் மட்டுமே தாங்குவார்கள்.

சீனா அனைத்து நாடுகளின் மேல் மறைமுக bio war நாடியது; ரஷ்யா நேரடி யுத்தம் ஆரம்பித்து இருக்கிறார்கள்; எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை.

கொரோனா என்ற கொடிய வைரஸே

உலகம் முழுவதும் மனிதர்களின் வாழ்க்கையில் பேரிடியை ஏற்படுத்தியது. அதன் தாக்கமே இன்றளவும் குறையாதப்போது இத்தகையப் போர்முறை மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், எண்ணற்ற வளங்களையும் சீரழிக்கும் ஆயுதமாக மாறிவிடக்கூடாது.

3-ம் உலக போர் வர வாய்ப்பு இல்லை. இது தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் ஒரு பிரச்னை. அவ்வளவு தான். மற்ற நாடுகள் இதில் தலையிடுவது முட்டாள்தனமான செயல்

என்னடா கொரோன பேச்சையே காணோம் என்று பார்த்தால் உலகம் போரை நோக்கிபோகிறது. மக்கள் இதற்கு மேல் தாங்க மாட்டார்கள்

அனைவரும் தங்களது கருத்துகளை பதிவிடும் முன் ஒரு வினாடி சிந்தியுங்கள். உலக நாடுகளின் இராணுவ பலம் கொண்ட மிகப்பெரும் நாடு ரஷ்யா. அது தன்னை விட சின்ன நாடான உக்ரைன் மீது போர் தொடுத்து உள்ளது. இது ரஷ்யாவின் படைபலம் இருக்கும் வலிமைக்கு இரண்டு நாட்களுக்குள் உக்ரைனை கைப்பற்றி விடும். ஆனால் இது அல்ல முடிவு. இதுவே மூன்றாம் உலக போருக்கு முதல் அடியாக கூட இருக்கலாம், அதனால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்படும், அனைத்து நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் பசி போர் தொடங்கி விடும் நம்முடைய அடுத்த தலைமுறை நல்ல சமுதாயத்தை காணாமல் உறங்கி கூட போகலாம், சிந்துத்து செல்....பிராத்தனை செய்வோம் ரஷ்யா மற்றும் உக்ரைன் மக்களுக்காக

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com