சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட என்கவுண்ட்டர் அவசியமில்லை! - வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட என்கவுண்ட்டர் அவசியமில்லை! - வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட என்கவுண்ட்டர் அவசியமில்லை! - வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 16-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக " தமிழ்நாட்டில் இன்னொரு என்கவுண்ட்டர்... சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட என்கவுண்ட்டர் அவசியமா? " எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.

காலத்தின் கட்டாயமாக தான் என்கவுண்ட்டர் நடக்கிறது. காவல்துறை குற்ற தடுப்பு பணிக்கும் முக்கியத்துவம் தர வேண்டி உள்ளது. குற்றங்களை தடுக்க என்கவுண்ட்டர் அவசியம்.

அவசியம் இல்லை. நேரான அணுகுமுறையில் தீவிர விசாரணை, சரியான தீர்ப்பு, உரிய தண்டனை, தாமதம் இல்லாமல் கொடுத்து விட்டால், சட்டம்  ஒழுங்கு நிலை நாட்டவும் முடியும். பிற குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்கவும் முடியும். ஒரு தவறுக்கு, நாம் கொடுக்கும் தண்டனை +உயிர் பறிப்பு சரியான தீர்வு ஆகாது.

திருந்துறவன் ஒரு வழக்கோடு திருந்திருப்பான். இப்படி 70,80 வழக்கு வாங்கி இனி திருந்துவானு நம்பினா பல குடும்பம் நடு தெருவில் நிற்க வேண்டிய சூழ்நிலை வரும்

வெளி வர முடியாத அளவில் ஒரு தண்டனை கொடுத்து சிறையில் அடைக்கும் பட்சத்தில் என்கவுண்ட்டர் எதற்கு?

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் குறைவு. இப்பொழுது உள்ள ஆட்சியில் இரண்டாவது முறையாக நடந்தேறியுள்ளது. மக்கள் மிகவும் பயத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதை அரசு உடனடியாக போர்கால நடவடிக்கையாக இது போன்ற ரவுடிகளை ஒழித்து தமிழ்நாடு ஒரு அமைதிப் பூங்கா என்பதை மாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட என்கவுண்ட்டர் அவசியமில்லை. ஆனால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com