ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எப்போது ஒரே நேர் கோட்டில் பயணித்திருக்கிறது? #LikeDislike

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எப்போது ஒரே நேர் கோட்டில் பயணித்திருக்கிறது? #LikeDislike

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எப்போது ஒரே நேர் கோட்டில் பயணித்திருக்கிறது? #LikeDislike
Published on

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஏப்ரம் 06-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக "வளர்ச்சி அரசியலுக்கு ஒத்துழைப்பு கேட்கும் ஸ்டாலின்... ஏற்குமா எதிர்க்கட்சிகள்" எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்டுகளில் சில

குஜராத்தில் தனது அரசியல் பயணத்தை மோடி இவ்வாறு தான் தொடங்கினார்! ஆனால் வளர்ந்தது பெரும் முதலாளிகள் மட்டுமே! உதாரணமாக அமெரிக்க அதிபர் இந்தியா வந்தபோது சுவர் எழுப்பி ஏழை மக்களை மறைத்து காட்டியது!

திமுகவும் அதிமுகவும் தங்கள் தேர்தல் & வாக்கு வங்கியை காப்பாற்றும் சுயலாபத்திற்காக சொத்து வரி, மின்சார கட்டணம், பேருந்து கட்டணம், பால் விலை etc., ஆகியவற்றை காலத்தே சிறிதுசிறிதாக உயர்த்தாமல் விட்டதன் தவறினால் தான் தற்போது எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் மாறிமாறி சந்திக்கின்றனர்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று ஒரே நேர் கோட்டில் பயணித்து இருக்கிறது? சொல், செயல், நடவடிக்கை எல்லாவற்றிலும், என்றும் எதிரெதிரே நின்று தாங்கள் நினைப்பதை,செய்து காட்டும் போது, நிமிடத்தில் மாறி விடுவார்களா?எதிர்க்கட்சி என்ற பெயரே எதிர்ப்பைப் பதிவு செய்கிறதே?என்றும் நடக்கவே நடக்காது.

ஆதரவு தாருங்கள் என கேட்பதை பிச்சை என்று சொல்ல தேவையில்லை. தார்மீக ஆதரவு கேட்பது கடமையும் கூட. ஆதரவு தருவது மறுப்பது அவரவர் விருப்பம். ஆனால் கேட்பது எந்த கட்சியாக இருந்தாலும், ஆட்சியாளர்களின் கடமையும் கூட, என கருதுகிறேன்

ஸ்டாலின் எதிர்க்கட்சியா இருந்தபோது செய்த அரசியலையும் விடுத்த அறிக்கைகளையும் இப்ப ஒத்துழைப்பு கேட்குறதையும் நெனச்சா சிரிப்பா சிரிப்பா வருது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com