நடுநிலை என்பது தீமையின் பக்கம் நிற்பது!- வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike
தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 26-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘ரஷ்யா- உக்ரைன் போர்... ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிலைப்பாடு சரியா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.
நடுநிலை என்பது தீமையின் பக்கம் நிற்பது ... Atleast ind should condemn Russia's action ... பாவம் செலன்ஸ்கி தனியா போராடிட்டு இருக்கார்
சரி, ஏனென்றால் ராஜாங்க ரீதியாக ரஷ்யா நம்முடன் நீண்ட கால நல்லுறவை பேணி வருகிறது. மேலும் அணு உலைகளை நிர்மாணித்து இந்தியக் கட்டமைப்பு வலிமை பெற துணை நிற்கிறது. உக்ரைன் நட்பு நாடு ஆனால் உக்ரைனின் அரசியல் ஆதாய கணக்குகளுக்கு நாம் செவி சாய்க்க வேண்டியது இல்லை.
உலகில் இதுபோன்ற இக்கட்டான சூழல் உருவாகும்போது, நமது திறன்பட்ட ஆளுமையை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பமாக அதை பயன்படுத்தியிருக்க வேண்டும்! ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடுநிலை வகித்த நமது நிலைப்பாடு சரியானதல்ல! கலிங்கம் கண்ட அசோக சக்கரவர்த்தியின் வழிவந்த சான்றோர்கள் நாம் என்பதை மறக்கலாமா?