தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், மும்பையிலிருந்து இன்று சென்னை வருவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் எப்போது வருவார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
தமிழக ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கும் மகராஷ்ட்ரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், மும்பையில் இருந்து சென்னைக்கு இன்று வருவார் என்று கூறப்பட்ட நிலையில், அவரது பயணத்திட்டம் குறித்து முடிவு செய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக தலைமைக்கு எதிரகா முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குரல் எழுப்பியுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மெரினா பேட்டிக்கு பின்னர் தமிழக அரசியல் சூழலில் மிகப்பெரும் மாற்றங்கள் நிகழும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீதும், சக அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்தார்.