தமிழ்நாடு
வித்யாசாகர் ராவ் முயற்சியால் ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை
வித்யாசாகர் ராவ் முயற்சியால் ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் கடந்தாண்டு நியமிக்கப்பட்ட நிலையில் ஆளுநர் மாளிகையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தார். திருவள்ளுவர் சிலை ஆளுநர் மாளிகையில் நிறுவப்படவும் காரணமாக இருந்தார்.
மேலும் திருவள்ளுவர் சிலையில் பொறிப்பதற்காக திருக்குறளில் இருந்து 3 குறள்களை தானே தேர்ந்தெடுத்தார். இது தவிர அவ்வையார் சிலையும் வித்யாசாகர் ராவ் முயற்சியில் ஆளுநர் மாளிகையில் நிறுவப்பட்டது. ஆளுநர் மாளிகையின் இயற்கை எழிலை சாமானியர்களும் கண்டுகளிக்கும் வாய்ப்பை தந்ததும் வித்யாசாகர் ராவ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு ராஜ் பவனில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.