\
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப் கொரோனா பாதிப்பால் மரணம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப் கொரோனா பாதிப்பால் மரணம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப் கொரோனா பாதிப்பால் மரணம்
Published on

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் முகமது யூசுப் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்றிரவு காலமானார். மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம், எழுவர் விடுதலை உள்ளிட்ட பல போராட்டத்தில் முன்னின்று நடத்தியவர் யூசுப் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com