தஞ்சை பெரிய கோயிலில் ஹிந்தி கல்வெட்டா ? உண்மை என்ன ?

தஞ்சை பெரிய கோயிலில் ஹிந்தி கல்வெட்டா ? உண்மை என்ன ?
தஞ்சை பெரிய கோயிலில் ஹிந்தி கல்வெட்டா ? உண்மை என்ன ?

தஞ்சை பெரிய கோயிலில் இந்தி எழுத்துகள் பொறிக்கப்பட்டு வருவதாக சமூகவலைத்தளங்களில் போலி வீடியோ ஒன்று  மீண்டும் வலம் வந்து கொண்டிருக்கிறது தெரியவந்துள்ளது. 

தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க அடையாளங்களில் ஒன்று தஞ்சை பெரிய கோயில். இந்தக் கோயில் ராஜ ராஜ சோழன் காலத்தில் கட்டுபட்ட வரலாற்று சிறப்பு மிக்க கோயில் ஆகும். இந்தக் கோயில் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று மீண்டும் வலம் வருகிறது. அதில் தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் எழுத்துகளுக்கு பதிலாக இந்தி எழுத்துகள் பொறிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த வீடியோ போலி என்று கோயில் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் வருகின்றது நகரி ஸ்டைலில் எழுதப்பட்டுள்ள மாராத்தி எழுத்துகள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கல்வெட்டுகள் மாராத்தியர்களின் ஆட்சி காலத்தில் விநாயகர் கோயில் கட்டப்பட்ட போது பொறிக்கப்பட்டது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 

தஞ்சை பெரிய கோயிலிலின் விநாயகர் கோயில் மாரத்தியர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. மேலும் அங்கு உள்ள பிரஹகநாயகி கோயில் பாண்டிய மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்டது. முருகன் கோயில் நாயாகா மன்னர்களால் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com