சென்னை, மதுரை உயர்நீதிமன்ற கிளைகளில் காணொலி விசாரணைகள் ஜனவரி 3 முதல் நிறுத்தம்

சென்னை, மதுரை உயர்நீதிமன்ற கிளைகளில் காணொலி விசாரணைகள் ஜனவரி 3 முதல் நிறுத்தம்

சென்னை, மதுரை உயர்நீதிமன்ற கிளைகளில் காணொலி விசாரணைகள் ஜனவரி 3 முதல் நிறுத்தம்
Published on

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில், வரும் திங்கள் கிழமை (ஜனவரி 3ஆம் தேதி) முதல் காணொலி காட்சி விசாரணை நிறுத்தப்பட்டு, நேரடியாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2020 மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக உயர் நீதிமன்றம் மூடப்பட்டு, அவசர வழக்குகளை மட்டும் நீதிபதிகள், தங்கள் வீடுகளில் இருந்து காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நீதிபதிகள் வீட்டிலிருந்தும், நீதிமன்றத்துக்கு வந்தும் வழக்குகளை விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக, வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி வாதிட விரும்பினால், அதற்கு அனுமதி வழங்கப்பட்டு, காணொலி காட்சி மூலமும், நேரடியாகவும் என கலப்பு விசாரணை முறை அமலில் இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில், ஜனவரி 3ம் தேதி முதல் வழக்குகள் நேரடியாக மட்டும் விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால், காணொலி காட்சி விசாரணை முறை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அவரது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 21 மாதங்களுக்கு பின் உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கள் கிழமை முதல் மீண்டும் முழுமையாக நேரடி விசாரணை துவங்க உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com