“கொள்கை மீது தீராத பற்று கொண்டவர்” - அன்பழகனுக்கு குடியரசு துணைத் தலைவர் புகழாரம்

“கொள்கை மீது தீராத பற்று கொண்டவர்” - அன்பழகனுக்கு குடியரசு துணைத் தலைவர் புகழாரம்
“கொள்கை மீது தீராத பற்று கொண்டவர்” - அன்பழகனுக்கு குடியரசு துணைத் தலைவர் புகழாரம்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவரது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 24ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்து அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டபோது, க.அன்பழகனுக்கு சிகிச்சை பலன் தராத நிலையே உள்ளதாக கூறினார். இதனையடுத்து, அப்போலோ மருத்துவமனை முன்பு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் குவியத் தொடங்கினர். இதனிடையே நள்ளிரவு 1 மணியளவில் க.அன்பழகன் உயிர்ப் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தச் செய்தி திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே அவரது மறைவிற்கு திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அன்பழகனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்குப் பல முக்கிய பிரமுகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் க. அன்பழகன் மறைவு குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ஒரு அஞ்சலி பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் அரசியல் வித்தகரும் திமுக பொதுச்செயலாளருமான கே.அன்பழகன் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்தேன்.

பேராசிரியர் என்று தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அவர், மிகச்சிறந்த பேச்சாளராகவும் அறிஞராகவும் திகழ்ந்தார். அவரது அறிவாற்றல், தாம் கொண்ட கொள்கையின் மீதான தீராத பற்று, மக்கள் நலனுக்கென அவரது உழைத்த அவரது உறுதி போன்ற குணங்கள் நமக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளன.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com