வெற்றிப்படிகள்வெற்றிப்படிகள்
தமிழ்நாடு
ஊத்தங்கரையில் வெற்றிப்படிகள் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் ஆர்வமாக பங்கேற்பு
அதியமான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெற்றிப்படிகள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் புதிய தலைமுறையின் வெற்றிப்படிகள் நிகழ்ச்சியில் +2 பொது தேர்வை எழுத இருக்கும் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் வெற்றிப்படிகள் என்னும் வழிகாட்டும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
ஊத்தங்கரையில் உள்ள அதியமான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெற்றிப்படிகள் நடத்தப்பட்டது. கல்லூரியின் தாளாளர் திருமால் முருகன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் கவனம் சிதறும் இந்த வயதில் படித்து முன்னேற வேண்டும் என மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தினார். ஆலோசனைகள் பயனுள்ளதாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்