காதலர் தினத்தில் உயிர்நீத்த மூத்த காதல் தம்பதியர் - திருவாரூரில் சோகம்

காதலர் தினத்தில் உயிர்நீத்த மூத்த காதல் தம்பதியர் - திருவாரூரில் சோகம்

காதலர் தினத்தில் உயிர்நீத்த மூத்த காதல் தம்பதியர் - திருவாரூரில் சோகம்
Published on

திருவாரூர் அருகே காதலர் தினத்தன்று உயிரிழந்த இணைபிரியா மூத்த காதல் தம்பதியர். பள்ளிவார மங்கலம் பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் பள்ளிவார மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பக்கிரிசாமி (78) சந்திராமாள் (76) தம்பதியர். சிறுவயதில் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக படுத்த படுக்கையாக இருந்து வந்து பக்கரிசாமி நேற்று காலை இயற்கை எய்தினார்.

இதையடுத்து கணவர் இறந்த சோகத்தில் இருந்த அவரது மனைவி சந்திராமாள் இன்று விடியற்காலை இயற்கை எய்தினார். காதலர் தினமான இன்று காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் இயற்கை எய்தியது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com