\
heavy rain
heavy rainpt desk

மிக கனமழை எச்சரிக்கை: 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த் துறை நிர்வாக ஆணையர் அவசரக் கடிதம்

மிக கனமழை எச்சரிக்கையை அடுத்த 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த் துறை நிர்வாக ஆணையர் அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.
Published on

வருவாய்த் துறை நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் எழுதியுள்ள அந்த கடித்ததில், வானிலை மையத்தின் எச்சரிக்கை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்கள், மற்றும் வடக்கு மாவட்டங்கள் என 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் மழையை எதிர்கொள்ள தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

heavy rain
heavy rainpt desk

பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்கவும், மாவட்ட நிர்வாகங்களை முழுமூச்சில் தயார்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கன முதல் மிக கனமழை வரை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அச்சூழலில் ஏற்படும் அனைத்து தேவைகளையும் சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை தயார் நிலையில் வைக்க வருவாய்த் துறை அறிவுறுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com