விஜயகாந்த் நிலத்தை உரிமை கொண்டாடிய திமுக எம்.எல்.ஏpt
தமிழ்நாடு
விஜயகாந்த் நிலத்தை உரிமை கொண்டாடிய திமுக எம்.எல்.ஏ.. நிலம் தேமுதிகவுக்கே சொந்தம் என்று தீர்ப்பு!
விஜயகாந்த் நிலத்தை உரிமை கொண்டாடிய திமுக எம்.எல்.ஏ மீதான வழக்கில் நிலம் தேமுதிகவுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது..
பொதுமக்களுக்காக தேமுதிக தலைவர்விஜயகாந்த் வாங்கிய நிலத்தை திமுக எம்எல்ஏ அபகரித்ததாகத் தொடரப்பட்டவழக்கில் நிலம் தேமுதிகவிற்குச்சொந்தம் என காங்கேயம் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் 3 ஏக்கர் நிலம்வாங்கச் சொல்லியிருக்கிறார். அப்போது தேமுதிகவில் இருந்த சந்திரகுமார் பெயரில் நிலம் வாங்கிய நிலையில், பின்னர் திமுகவில் சேர்ந்து எம்எல்ஏஆன சந்திரகுமார் நிலத்தைத் தராமல் வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
விஜயகாந்த்கோப்புப்படம்
இது தொடர்பாக தேமுதிக சார்பில் காங்கேயம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த காங்கேயம் நீதிமன்றம், வெள்ளகோவிலில் உள்ள 3 ஏக்கர் நிலம் தேமுதிகவிற்குச் சொந்தம் என உத்தரவிட்டது.

