மணலைக் கயிறாகத் திரிக்க முயல்கிறார் ஸ்டாலின் - அமைச்சர் எஸ்.பி வேலுமணி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மணலைக் கயிறாகத் திரிக்க முயல்கிறார் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார்.
சென்னையில் ஆற்று மணலுக்கு பதில் எம்-சாண்ட் பயன்படுத்தியதில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் எஸ்.பி.வேலுமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சென்னையில் நடைபெற்ற ஆயிரத்து 164 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளில் 32 புள்ளி 67 கோடி ரூபாய்க்கு மட்டுமே மணல் சேர்த்து கான்கிரீட் அமைக்கும் வேலை நடந்ததாகக் கூறியுள்ளார்.
பணிகளின் மதிப்பே 32 புள்ளி 67 கோடி ரூபாய்தான் எனும் போது ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 2017 மற்றும் 2018ஆம் ஆண்டில் எம்-சாண்டின் விலை ஆற்று மணலை விட அதிகமாகவே பொதுப்பணித்துறை பட்டியலில் இருந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

