எல்ஈடி விளக்குகளால் ரூ.446 கோடி சேமிப்பு - அமைச்சர் வேலுமணி 

எல்ஈடி விளக்குகளால் ரூ.446 கோடி சேமிப்பு - அமைச்சர் வேலுமணி 

எல்ஈடி விளக்குகளால் ரூ.446 கோடி சேமிப்பு - அமைச்சர் வேலுமணி 
Published on

தமிழகத்தில் தெருக்களில் எல்.ஈ.டி.விளக்குகள் பொருத்தியதன் பயனாக தமிழக அரசு 446 கோடி ரூபாய் சேமித்துள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

உயர் கோபுர விளக்குகள் எம்பி நிதியில் தான் அமைக்க வேண்டும் என்ற விதியை மாற்றி, எம் எல் ஏ க்களின் நிதியிலும் அமைக்கும் வகையில் திருத்தம் கொண்டுவரப்படுமா என எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி, மின்சாரத்தை சேமிக்கும் பொருட்டு மொத்தமுள்ள 43 லட்சத்து 61 ஆயிரம் தெரு விளக்குகளில் 23 லட்சத்து 63 ஆயிரம் விளக்குகள் எல் ஈ டி விளக்குகளாக பொருத்தப்பட்டுள்ளதாகவும், இதன் பயனாக இதுவரை 446 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் வரும் காலங்களில் எம் எல் ஏ க்கள் நிதியின் மூலம் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com