வைகோவின் உதவியாளர் கைதா? - இலங்கை தமிழர்கள் பிரச்னை குறித்து வேல்முருகன் சொன்ன முக்கிய தகவல்
முதலமைச்சர் உடனான சந்திப்பில் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்ததாக குறிப்பிட்ட வேல்முருகன், இலங்கையில் இருந்து வந்து தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக முதல்வரிடம் எடுத்துக் கூறியதாகவும் தெரிவித்தார்.
அதில், “ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் உதவியாளர் பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின. ஆனால், அது வதந்தி தான். தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்காக அரசியல் லாபியில் ஈடுபட்ட சிலர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளின் நெருக்கடியால் இந்த கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நம் நாட்டில் உள்ள ஈழத் தமிழர்களின் பாஸ்போர்ட் காலாவதியானால் அதை புதுப்பித்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கலாம். எவ்விதமான பிரச்சனைகளையும் அவர்கள் தமிழ்நாட்டில் செய்யவில்லை. அவர்களை மத்திய அரசு மூலமாகவே கைது செய்யக்கூடாது.என்பது சிறப்பு முகாம்களில் அடைக்கக் கூடாது உள்ளிட்ட விஷயங்கள் அனைத்தையும் முதலமைச்சருடன் கூறினேன்” எனத் தெரிவித்தார்.